உள்ளடக்கத்துக்குச் செல்

துருவா அணு உலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துருவா என்பது மும்பையில், ட்றோம்பே என அறியப்படும் இடத்திலுள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் செயல்படும் ஒரு அணு உலையைக் குறிப்பதாகும்.[1] இந்தியாவில் தற்போதுள்ள ஆராய்ச்சி மையங்களில் அமைந்த மிகப்பெரிய அணு உலை இதுவே.[2] இந்த உலை இந்தியாவின் ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்கு அணு ஆயுதங்கள் தயாரிக்கும் திட்டத்தின் கீழ் புளுத்தோனியம் கலந்த எரிந்த அணு எரிபொருளை சேகரித்து திட்டத்திற்கு அவ்வப்போது வழங்குகிறது.[3] இதைக் கட்டுவதற்கு பத்து வருடங்கள் ஆயின, பின்பு 1985 ஆம் ஆண்டில் தான் இந்த அணு ஆராய்ச்சி உலையை செயல்படுத்த முடிந்தது. அப்படி இருந்தும், சில தொழில் நுட்பம் சார்ந்த இடர்பாடுகளால், முழு வீச்சில் இந்த உலையை 1988 ஆம் ஆண்டில் தான் செயல்படுத்த இயன்றது.

சைரஸ் [4] அணு உலையைப் போலவே இது இருந்தாலும், இது அதை விடப் பெரியதாக, இதை இந்திய வல்லுனர்கள் உருவாக்கினார்கள். இந்த உலையில் யுரேனியம் எரிபொருளாகப் பயன்படுகிறது. துத்தேரியம் வகை கனநீர் கட்டுப்படுத்தியாக அல்லது தணிப்பியாகப் பயன்படுகிறது. இந்த உலை 100 மெகா வாட் திறன் கொண்டதாகும். ஆண்டொன்றிற்கு 16 முதல் 28 கிலோ அளவிற்கு எரிந்த புளுத்தோனியம் அணு எரிபொருளை வழங்கி வருகிறது.

இருபத்தி ஐந்து ஆண்டுகள் நிறைவு

[தொகு]

துருவா அணு உலை தொடங்கிய பிறகு இருபத்தி ஐந்து ஆண்டுகள் (1985 -2010) நிறைவடைந்ததை அண்மையில் கொண்டாடினார்கள். இந்தியா-அமெரிக்க நாடுகளிடையே குடிமுறைசார் ஒப்பந்தங்கள் கையெழுத்தான பிறகு, ஒப்பந்தத்தில் கூறியபடி சைரஸ் அணு உலையையும் துருவா அணு உலையும் டிசம்பர் 2010 முடியும்பொழுது செயல்படுத்தாமல் நிறுத்தி வைத்து விடுவார்கள். அதை வைத்துக்கொண்டு இதர ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்துவார்கள். கல்லூரி மாணவர்களும் இந்த உலையை நேரில் பார்த்து பல விடயங்களைக் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்படும்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ^The Dhruva Research Reactor
  2. ^Selected Indian Nuclear Facilities
  3. ^ India’s Military Plutonium Inventory
  4. ^ "Canadian-Indian Reactor, U.S. (CIRUS)"
  5. ^ http://www.thehindu.com/sci-tech/article970457.ece
"https://ta.wikipedia.org/w/index.php?title=துருவா_அணு_உலை&oldid=3760155" இலிருந்து மீள்விக்கப்பட்டது